தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசியாவிலேயே முதன்முறையாக திருவள்ளூரில் அதிநவீன பல்நோக்கு மருத்துவமனை திறப்பு - poonamalle hospital

திருவள்ளூர்: ஆசியாவிலேயே முதன்முறையாக அதிநவீன கருவிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை பிரிவினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி திறந்துவைத்தார்.

tpr

By

Published : Jul 19, 2019, 11:21 PM IST

சென்னை அடுத்த பூந்தமல்லியில் இயங்கிவரும் சவிதா பல் மருத்துவமனையில் பிரத்யேகமாக பல் தொடர்பான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இங்கு ஆசியாவில் முதல்முறையாக அதிநவீன கருவிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை பிரிவு கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

திறப்பு நிகழ்ச்சி

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்த அதிநவீன மருத்துவமனை 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், பிரத்யேக லேசர் கருவிகள் மூலமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல், வீடியோ காட்சிகள் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல் போன்ற அதிநவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், இங்கு வரும் நோயாளிக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகள் குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையால் இதன் சுற்றுவட்டர்ப் பகுதிகளில் உள்ள மக்கள் அதிகளவில் பயனடைவார்கள்” என்றார். பின்னர், மருத்துவமனையை சுற்றி பார்த்து மருத்துவ முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

ABOUT THE AUTHOR

...view details