தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதா வழங்கிய இலவசங்கள் குறித்து பேசி வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்! - அரக்கோணம் நாடாளமன்ற ஏகே மூர்த்தி

திருவள்ளூர்: அரக்கோணம் மக்களவைத் தொகுதியில், ஜெயலலிதா வழங்கிய இலவசம் திட்டங்கள் குறித்து பேசி பாமக வேட்பாளர் ஏ.கே மூர்த்தி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அரக்கோணம் நாடாளமன்ற ;தொகுதி வேட்பாளார் ஏகே மூர்த்தி

By

Published : Apr 14, 2019, 8:08 AM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டையில் பாமக கட்சியின் வேட்பாளர் ஏ.கே மூர்த்தியை ஆதரித்து திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் மற்றும் தேமுதிக மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

இதில் மக்களிடையே பேசிய வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி நல்லாட்சி, ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் பொதுமக்களுக்கு இலவச மின்சாரம், இலவச அரிசி மற்றும் முதியோர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் என பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆகையால் இதேபோன்று ஆட்சி அமைய மாம்பழ சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதி வேட்பாளார் ஏகே மூர்த்தி பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details