தமிழ்நாட்டின் கலாசாரத்தை உலகளவில் இசை மூலம் கொண்டுசெல்ல 'தி பியூச்சர்ஸ்' என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகப் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.
தனது 53ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் ஐயர்கண்டிகை கிராமத்தில் உள்ள தனது ஸ்டுடியோவில் ஏ.ஆர். ரகுமான் தமது புதிய திட்டத்தை செய்தியாளர்களிடம் கூறினார்.