திருவள்ளூர் ஆட்சியரகத்தில் அமைந்துள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுமார் இரண்டு மணி தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். இதில், கைப்பற்றிய ஆவணங்கள் தொடர்பாக உதவி இயக்குனர் சீனிவாசராவ் மற்றும் அலுவலக உதவியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சியரகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை - anti corruption dept
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியரகம்
சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு, தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் அலுவலகம் குறித்த புகார்கள் வந்ததன் பெயரில் இன்று இந்த சோதனையை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.