திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம். சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார் எழுந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அலுவலர்கள் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்ட ஆவணங்கள், அதற்கு செலுத்தப்பட்ட கட்டணம், கணக்கில் வராத பணம் உள்ளதா என பல்வேறு சோதனைகளை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.