தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூர் போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

திருவள்ளூர்: தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.

Anti-Corruption Department
Tiruvallur

By

Published : Dec 12, 2020, 2:53 PM IST

திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டையில் போக்குவரத்துத் துறை சார்பில் சோதனைச்சாவடி இயங்கி வருகிறது, இந்த சோதனைச்சாவடியில் வாகனங்களுக்கு உரிமம் வழங்குவதில் லஞ்சம் பெறப்படுவதாக லாரி உரிமையாளர்கள் தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்களுக்கு புகார் சென்றது.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த சோதனைச்சாவடியில் அதிகாலை 4 மணியளவில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் வாகனங்கள் உரிமம் பெற வேண்டி சமர்ப்பித்த விண்ணப்பங்கள், அதற்கு அளிக்கப்பட பெர்மிட் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதற்கான கட்டண தொகை பிரித்தெடுக்கப்பட்டது.

அப்போது அங்கு இருந்த பண கவுண்டரில் கணக்கில் வரமால் இருந்த ரூபாய் 72 ஆயிரத்து 800 ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். கணக்கில் வராத பணம் வைத்திருந்த போக்குவரத்துத் துறை ஊழியர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அலுலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details