தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”நடப்பது அம்மா ஆட்சி அல்ல சும்மா ஆட்சி” - அங்கன்வாடி ஊழியர்கள்! - thiruvallur district news

திருவள்ளூர் : நடப்பது அம்மா ஆட்சி அல்ல சும்மா ஆட்சி என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.

anganwadi-staff-protest-in-thiruvallur
anganwadi-staff-protest-in-thiruvallur

By

Published : Feb 23, 2021, 10:02 PM IST

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரே 500க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில், முன்னாள் முதல்வரால் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை உடனே அமல்படுத்த வேண்டும், அகவிலையுடன் கூடிய ஓய்வூதியம், முறையான குடும்ப ஓய்வூதியத்தை அறிவித்திட வேண்டும். பணி ஓய்வு பெறுகின்றபோது பணிகொடையாக ஊழியர்களுக்கு ரூபாய் 10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூபாய் 5 லட்சமும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
இதையடுத்து, காத்திருப்பு போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் மணிமேகலா, பல ஆண்டுகளாக தெருவில் இறங்கி ஒப்பாரி வைத்து போராடிவரும் எங்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அம்மா ஆட்சி என்று சொல்லிக் கொண்டு சும்மா ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள் உடனடியாக எங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்து அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையேல் எங்களின் போராட்டம் தீவிரமடையும் என எச்சரித்தார்.

ABOUT THE AUTHOR

...view details