வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு எல்லைகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அம்மப்பள்ளி அணையில் இருந்து நேற்றிரவு விநாடிக்கு 950 கனஅடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீராக வெளியேற்றப்பட்டது.
பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வந்தடைந்த ஆந்திர உபரி நீர்! - heavy rain
திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி அணையில் திறந்து விடப்பட்ட உபரி நீர் பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது.
பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வந்தடைந்த ஆந்திர உபரி நீர்!
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவள்ளூர் வட்டங்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தார்.
நெடியம், சொரக்காப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 100 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூண்டி ஏரிக்கு நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
Last Updated : Nov 17, 2020, 7:51 PM IST