தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனிமைப்படுத்தப்பட்ட வீட்டிலிருந்த மூதாட்டி உயிரிழப்பு

திருவள்ளூர்: தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்த மூதாட்டி உயிரிழந்தார். கரோனா அச்சத்தால் உடலை அப்புறப்படுத்த யாரும் முன்வராததால் 5 மணி நேரம் வீட்டு வாசலில் தனி பிணமாக கிடந்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் தனிமையிலிருந்த மூதாட்டி உயிரிழப்பு
தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் தனிமையிலிருந்த மூதாட்டி உயிரிழப்பு

By

Published : Jul 28, 2020, 5:19 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து அவரது வீட்டை நகராட்சி ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீடாக அறிவித்து வீட்டிற்கு யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்பு அமைத்தனர். வீட்டில் சுப்ரமணியனின் தாய் சந்திரா வயது (80) மட்டும் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு உணவு, குடிநீர் வழங்க உதவியின்றி 5 நாள்களாக முடங்கியிருந்த நிலையில் இன்று (ஜூலை28) காலை வீட்டு வாசலில் மயங்கி விழுந்தார்.

அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டின் அருகே வந்த ஆம்புலன்ஸ் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டை பார்த்துவிட்டு மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்து சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் மூதாட்டி இறந்தார்.

நகராட்சி அலுவலருக்கு புகார் செய்தும் யாரும் வராத நிலையில் பொதுமக்களும் அச்சத்தில் உடல் அருகில் செல்லாததால் 5 மணி நேரமாக மூதாட்டியின் உடல் தனியாகக் கிடந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர் வருவாய் கோட்டாட்சியர் ஸ்வர்ணம் அமுதா நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை நகராட்சி பணியாளர்கள் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

இறந்த மூதாட்டிக்கு கரோனா பரிசோதனை செய்து உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். கரோனா அச்சத்தால், இறந்த மூதாட்டியின் உடல் 5 மணி நேரம் தனி பிணமாகக் வீட்டு வாசலில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details