தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆந்திராவில் தொடர் மழை: அம்மம்பள்ளி அணையிலிருந்து நீர் திறப்பு - அம்மம்பள்ளி அணை

திருவள்ளூர்: தமிழ்நாடு-ஆந்திர எல்லையான திருத்தணி அருகே, ஆந்திராவிலிருந்து நேற்றிரவு 11 மணிக்கு 300 கன அடி நீர் திறக்கப்பட்டது.

ஆந்திராவிலிருந்து 300 அடி நீர் திறப்பு
ஆந்திராவிலிருந்து 300 அடி நீர் திறப்பு

By

Published : Oct 21, 2020, 10:59 AM IST

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அம்மாவட்ட மக்களுக்கு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “ஆந்திரா மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து நேற்றிரவு 11 மணிக்கு 300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது.

230 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட, இந்த நீர்த்தேக்கத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணை நிரம்பியது.

அதனைத் தொடர்ந்து திறக்கப்பட்ட நீரானது ஆந்திர மாநிலத்தில் உள்ள அம்மம்பள்ளி, கத்திரிபள்ளி உள்ளிட்ட 7 கிராமங்களை கடந்து தமிழக எல்லையான கொசஸ்தலை ஆறு திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டங்களை சேர்ந்த கரையோர மக்கள் பாலத்தை கடக்க வேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்கும்படியும் வெள்ள அபாயம் எச்சரிக்கை அளிக்கப்படுகிறது.

மேலும், இத்தகவல் வருவாய்த் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை ஆகிய துறைகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details