தமிழ்நாடு

tamil nadu

அம்பேத்கர் சிலைக்கு மண்டபம் அமைத்துத் தந்த ஊராட்சி மன்றத் தலைவர்!

By

Published : Apr 15, 2021, 6:51 AM IST

திருவள்ளூர்: அம்பேத்கரின் 131ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அரண்வாயல் ஊராட்சி மன்றத் தலைவர் காவேரி அன்பழகன் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் அம்பேத்கர் சிலைக்கு மண்டபம் அமைத்துத் தந்துள்ளார்.

அம்பேத்கர் 131 ஆவது பிறந்தநாள்  அம்பேத்கர் சிலை  அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி மரியாதை  Floral tribute to Ambedkar statue  Ambedkar's 131st Birthday Flower Tribute to Ambedkar Statue  Ambedkar's 131st Birthday
Floral tribute to Ambedkar statue

திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பேத்கரின் 130ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முழுவதும் உள்ள விசிக நிர்வாகிகள், பகுஜன் சமாஜ் கட்சி, அம்பேத்கர் விடுதலை இயக்கம், அம்பேத்கர் மக்கள் மன்றம், அதிமுக விஜய் மக்கள் இயக்கம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு இயக்கத்தினர் அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியத்தில் விசிக கட்சியின் கைவண்டுர் முகாம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அப்போது, அம்பேத்கரின் பிறந்தநாளில் பிறந்த ஒரு வயது குழந்தைக்காக கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கைவண்டுர் முகாம் செயலாளர் சௌந்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கார்த்திக் நாகராஜ் சுரேஷ் குப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மேற்கு மாவட்டச் செயலாளர் மு.வா. சித்தார்த்தன் தத்துவ மைய மாநில துணைச்செயலாளர் கைவண்டுர் செந்தில், பூண்டி ஒன்றியச் செயலாளர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு புரட்சியாளர் அம்பேத்கருக்கு வீரவணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்.

திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் முகாம் சார்பில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக அப்பகுதி மாவட்ட பொறுப்பாளர் ராமு அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மண்டபம்போல் பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டுமென ஊராட்சி மன்றத் தலைவர் காவேரி அன்பழகன் கோரிக்கைவிடுத்திருந்தார்.

ஊராட்சி மன்றத் தலைவர் அமைத்து கொடுத்த மண்டம்

அவரது கோரிக்கையை ஏற்று அரண்வாயல் ஊராட்சி மன்றத் தலைவர் காவேரி அன்பழகன் சுமார் ரூபாய் ஒன்றரை லட்சம் செலவில் அம்பேத்கருக்கு இரும்பு வேலியால் மண்டபம் அமைத்துக் கொடுத்து அவரது பிறந்தநாளையொட்டி அதைத் திறந்துவைத்தார்.

இதையும் படிங்க:அம்பேத்கருக்கு அதிமுகனர், திமுகனர் மரியாதை

ABOUT THE AUTHOR

...view details