தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்! - Sholavaram police

திருவள்ளூர் அருகே அம்பேத்கரின் முழு உருவ சிலையை சேதப்படுத்தியவர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

By

Published : Jan 2, 2023, 1:02 PM IST

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

திருவள்ளூர்: சோழவரம் அடுத்த நெடுவரம்பாக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். சுமார் 8 அடி உயரமுள்ள இந்த சிலை கடந்த 2017ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இன்று காலையில் கிராம மக்கள் பார்த்த போது முகம், வலது கை, ஆள்காட்டி விரல் என கை சேதமடைந்தது தெரியவந்தது.

பின்னர் இது குறித்து சோழவரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப்பதிவு செய்த சோழவரம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஈஷா யோகாவில் பயிற்சி முடிந்து மாயமான பெண் கிணற்றில் சடலமாக மிதப்பு?

ABOUT THE AUTHOR

...view details