தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திருவள்ளூரில் அனைத்து ஏரிகளும் மீட்கப்படும்!' - ஆட்சியர் உறுதி - collector maheshwari ravikumar

திருவள்ளூர்: மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து ஏரிகளும் மீட்கப்படும் என்று ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உறுதியளித்தார்.

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவி குமார் ஆய்வு

By

Published : Jul 29, 2019, 11:35 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாருவதற்காக ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து ஏரிகளும் மீட்கப்படும். பழவேற்காடு கழிமுகப் பகுதிகளை ஒட்டி ஆக்கிரமிக்கப்பட்ட அரசுப் புறம்போக்கு நிலங்களில் செயல்படும் இறால் பண்ணைகள் அகற்றப்பட்டுவருகிறது' என்றார்.

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு

மழைக் காலங்களில் பெய்யும் மழைநீரை சேமிக்கும் வகையில் ஏரியின் கரை மதகுகள் சீரமைக்கப்பட்டு உள்ளதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து ஏரிகளும் மீட்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details