தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடையாள அட்டையுடன் வருபவர்களுக்கே மதுபாட்டில்கள் - டிஎஸ்பி கல்பனா தத் - Liquors will be provided for those who come with the identity card in Tiruvallur

திருவள்ளூர்: அடையாள அட்டையுடன் வருபவர்களுக்கே மதுபாட்டில்கள் வழங்கப்படும் என மதுவிலக்கு டிஎஸ்பி கல்பனா தத் தெரிவித்துள்ளார்.

கும்மிடிப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் கல்பனா தத்
கும்மிடிப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் கல்பனா தத்

By

Published : May 7, 2020, 2:18 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 132 மதுபான கடைகளில், 122 கடைகள் திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லையில் வருகின்றன. அதில் 66 மதுக்கடைகள் கரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளதால் அவை திறக்கப்படாது என்று கும்மிடிப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் கல்பனா தத் தெரிவித்தார்.

மேலும், சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள 56 மதுக்கடைகளில் 16 திறக்கப்படாது, 40 கடைகள் மட்டுமே திறக்கப்படும். குறிப்பாக மது வாங்கவரும் நபர்கள் அடையாள அட்டையை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். சென்னைவாசிகளுக்கு கட்டாயம் மது விற்பனை செய்யப்படமாட்டாது. விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

அதனைத்தொடர்ந்து மது வாங்க வருபவர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். தகுந்த இடைவெளி விட்டு நிற்க வேண்டும். அப்படி நிற்க தவறினால் அவர்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனாவால் மற்ற தொற்றுகள் அதிகரிக்கும் - யுனிசெஃப் கவலை

ABOUT THE AUTHOR

...view details