2020ஆம் ஆண்டு முதல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு வகித்துவந்த பொன்னையா தற்போது நகராட்சி நிர்வாக இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை சுகாதார துணை ஆணையராகப் பொறுப்பு வகித்து வந்த ஆல்பி ஜான் வர்கீஸை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
திருவள்ளூர் மாவட்ட புதிய ஆட்சியராகிறார் ஆல்பி ஜான் வர்கீஸ்! - அண்மைச் செய்திகள்
திருவள்ளூர்: மாவட்ட புதிய ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று (ஜூன் 16) காலை 6.45 மணிக்கு பொறுப்பேற்றார்.
திருவள்ளூர் மாவட்ட புதிய ஆட்சியராகிறார் ஆல்பி ஜான் வர்கீஸ்!
இந்நிலையில், நேற்று (ஜூன் 15) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் புதிதாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் அவர்களின் பொறுப்பு, பணிகள் குறித்துச் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
2013இல் ஐஏஎஸ் ஆன இவர் முதன்முறையாக மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவரக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துச்சாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வித்தியா ஆகியோர் மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ட்விட்டருக்கான சட்டப் பாதுகாப்பை விலக்கிய ஒன்றிய அரசு