தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 22, 2020, 12:43 PM IST

ETV Bharat / state

விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலை!

திருவள்ளூர்: திருவாலங்காடு அருகேயுள்ள கிராமத்தில் 4 கிலோ எடைகொண்ட ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி ஐம்பொன் சிலை கண்டெடுப்பு  திருத்தணி மாவட்டச் செய்திகள்  ஐம்பொன் சிலை  thiruvallur news  thiruthani news
விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலை

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் மருங்குளம் கிராமத்தில் கல்யாண வரதராஜ சுவாமி கோயில் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ராமராஜ்(45) குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலை

கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் வேர்க்கடலை பயிரிட நிலத்தை அவர் உழுது கொண்டிருந்தபோது, மூன்று அடி உயரம் கொண்ட ஐம்பொன் அம்மன் சிலை நிலத்தில் புதைந்திருந்ததைக் கண்டெடுத்தார். இதைத்தொடர்ந்து ராம்ராஜ் திருத்தணி வருவாய்த் துறையினர், காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த திருத்தணி தாசில்தார் உமா, சுமார் 4 கிலோ எடைகொண்ட ஐம்பொன் சிலையை மீட்டு திருத்தணி கருவூலத்தில் பத்திரமாக ஒப்படைத்தார்.

இதையும் படிங்க:கரோனா ஊரடங்கு: பழைய இரும்புக் கடைக்குச் செல்லும் விசைத்தறிகள்...?

ABOUT THE AUTHOR

...view details