திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரையைச் சேர்ந்தவர் மனோகரன். அதிமுக பிரமுகரான இவர் இரண்டாவது முறையாக கொண்டக்கரை ஊராட்சியின் தலைவராக இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் (மே.15) இரவு குருவிமேடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு விட்டு தனது மனைவி, குழந்தைகளுடன் அவர் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, டிப்பர் லாரியில் வந்த 10 பேர் மனோகரனை அவரது குடும்பத்தார் கண்முன்னே சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.