தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக ஊராட்சித் தலைவர் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணா

திருவள்ளூர் அருகே அதிமுக ஊராட்சித் தலைவர் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளம்பெண் தர்ணா
இளம்பெண் தர்ணா

By

Published : Sep 12, 2021, 10:09 PM IST

திருவள்ளூர் :வேப்பம்பட்டு அருகே அயத்தூர் ஊராட்சித் தலைவராக இருப்பவர் தேவிதாஸ். அதிமுக ஊராட்சித் தலைவரான இவருக்கு வினோத் என்ற மகன் உள்ளார். வினோத் அதே பகுதியை சேர்ந்த மாலினி என்ற பெண்ணை (21) 5 ஆண்டுகளாக காதலித்தார்.

இதற்கு ஊராட்சித் தலைவரான தேவிதாஸ் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் வினோத்தும், மாலினியும் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தன் தாய், தந்தையை சமாதானம் செய்துவிட்டு வருவதாக வினோத் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் வினோத்தின் நடவடிக்கைகள் மாறியதாக கூறப்படுகின்றது. மேலும் மாலினியுடன் வாழ விருப்பமில்லை என கூறி வினோத் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி இளம் பெண் ஊராட்சித் தலைவர் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தகவல் அறிந்து வந்த செவ்வாப்பேட்டை காவல் துறையினர், சமூக நலத்துறை அலுவலர் ஞானசெல்வி நேரில் சென்று வினோத், மாலினி வீட்டாரிடம் விசாரணை நடத்தி கணவனின் தந்தை வீடான ஊராட்சித் தலைவர் வீட்டில் தங்க வைத்து சென்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில் ”நான் ஏழ்மையாக இருப்பதால் கணவரின் பெற்றோர் ஊராட்சிமன்ற தலைவர் என்ற அதிகாரத்தில் தன்னை வாழவிடாமல் செய்கின்றனர். யாருக்கும் தெரியாமல் தன் கணவருக்கு வேறொரு திருமணம் செய்ய முயற்சி செய்கின்றனர்” என குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க : வாட்டி வதைத்த குடும்ப பிரச்சினை - அவசரத்தில் தாய் மகன் எடுத்த கோர முடிவு

ABOUT THE AUTHOR

...view details