திருவள்ளூர்:சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் எம்ஜிஆர் நகர் அதிமுகவின் கிளைச் செயலாளராக இருந்து வந்தார்.
அதிமுக கிளைச் செயலாளர் வெட்டி கொலை
நேற்று (ஆக.17) நள்ளிரவு வீட்டின் அருகே கழுத்து, கை, கால் என சிலம்பரசன் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருவர் காவல் நிலையத்தில் சரண்