திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குள்பட்ட மோவூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு மழை நீரை வடித்து பயிர்களை பாதுகாப்பது குறித்து அறிவுரை வழங்கினார். வட கிழக்கு பருவ தொடர் மழை மற்றும் காற்றினால் சேதமடைந்த பப்பாளி வயல் நிலம் கத்திரிக்காய் தோட்டம், பூஞ்செடிகள் தோட்டம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
மழை நீரில் மூழ்கும் பயிர்கள்- தோட்டக்கலை துணை இயக்குநர் ஆய்வு - ஜெபக்குமாரி
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தோட்டக்கலைப் பயிர்களில் தண்ணீர் தேங்கி உள்ள வயல் நிலங்களில் தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெபக்குமாரி ஆய்வு செய்தார்.
agri dept jebakumari inspetion in thiruvallur
மேலும் விவசாயிகள் தங்களது சாகுபடி செய்த பயிர் பரப்பினை கிராம நிர்வாக அலுவலரின் இ-அடங்கலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. அப்போது, பூண்டி வட்டார தோட்டக்கலை துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க : 'பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வேண்டும்'