கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்வகையில் தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைவரும் தகுந்த இடைவெளியினைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், மனு கொடுக்க வரும் நபர்கள் யாரும் காவல் நிலையத்திற்குள் வரக்கூடாது எனவும், வரவேற்பாளர் வெளியில் அமர்ந்து மனுக்களைப் பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதனையொட்டி முதல்முறையாக திருவள்ளூர் மாவட்ட நகர காவல் நிலையத்தில், 144 தடை உத்தரவு முடியும்வரை வெளியிலிருந்து மனுக்களைப் பெற, தனி கவுன்ட்டர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.