திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நீதிமன்றத்தில் விஜய் என்ற வழக்குரைஞர் பணி புரிந்து வருகிறார். இவர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் மாமூல் கேட்டு மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குரைஞர் மீது பொய் வழக்கு: நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்! - வழக்குறைங்கர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்: வழக்குரைஞர் மீது பொய் வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்திற்கு எதிரே வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன்பாக வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்குரைஞர்களுக்கு எதிராக காவல் துறையினர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், வழக்குரைஞர் விஜய் மீது திட்டமிட்டு காவல் ஆய்வாளர் நாகலிங்கம் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர்.
மேலும், வழக்குரைஞர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட காவல் ஆய்வாளர் நாகலிங்கம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜய் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.