தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழுக்கு ஒன்னுனா விடமாட்டோம்- அமைச்சர் பாண்டியராஜன் - tamilnadu news

திருவள்ளூர்: தமிழ் மொழிக்கு ஒரு இன்னல் நேர்ந்தால் நிச்சயம் தமிழ்நாடு அரசு அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பாண்டியராஜன்

By

Published : Sep 19, 2019, 12:08 PM IST

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்,


"இந்தி மொழியை திணிப்பது தொடர்பாக ரஜினிகாந்த் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. திமுக இந்தித் திணிப்புக்கு எதிராக போராடினால் எப்படியும் தோற்று விடுவோம் என்பதற்காக போராட்ட முடிவை அக்கட்சி கைவிட்டதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அமைச்சர் பாண்டியராஜன்

அனைத்து மாநில மொழிகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அறிவிக்கவுள்ளார். தமிழ் மொழியைக் காப்பதில் கரம் கோர்த்து செயல்பட திமுக முன்வர வேண்டும், அப்படி வந்தால் வரவேற்க தயார். தமிழ் மொழிக்கு ஒரு இன்னல் நேர்ந்தால் நிச்சயம் தமிழ்நாடு அரசு அதற்கு எதிராக குரல் கொடுக்கும்." என கூறினார்.

மேலும் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றும் அதற்காக தொண்டர்கள் கடினமாக உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details