திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாவட்டச் செயலாளருமான பி.வி. ரமணா நேற்று (ஏப். 4) கூவம், குமாரச்சேரி, கள்ளம்பேடு, கண்ணூர், கொட்டையூர், முதுகூர், ஆகிய ஊராட்சிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
கொட்டையூரில் பரப்புரை மேற்கொண்டபோது, அக்கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீரென சாமி ஆடினார். அப்போது அவர் இந்த ஊருக்கு கோயில் கட்டி அலங்காரம் செய்துதர வேண்டும் எனக் கோரிக்கைவைத்தார். இதைத்தொடர்ந்து வேட்பாளர் நான் வெற்றிபெற்றால் கோயில் கட்டித் தருகிறேன் என உறுதியளித்தார்.