திருவள்ளூர்: பெரியபாளையம் அடுத்த தொளவேடு கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ. 70 லட்சம் மதிப்பில் ஆரம்பபள்ளியில் 4 வகுப்பறைகள் கட்டப்பட்டது. இதனை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள், மாணவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் வெளியில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர்கள் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்றார்.