திருவள்ளூர்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி, தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார் என காவல் துறையில் புகார் அளித்திருந்த நிலையில், இன்று இந்த வழக்கு திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மேலும் நீதிபதி பவித்ரா முன்னிலையில் நடிகை விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பெறபட்டது.
கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில், நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக புகார் ஒன்றை அளித்தார். மேலும் அந்த புகாரில், சீமான் மோசடி வழக்கில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் அவர் மீது விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜயலட்சுமி எழுதிக் கொடுத்ததாகக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து நேற்று நடைபெற்ற விசாரணையில், திருவள்ளூர் ஒருகிணைந்த நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி விசாரணைக்காக ஆஜராகினார்.
சென்னை, ராமாபுரம் காவல் நிலையத்தில் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை செய்தனர். காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையில் நடிகை விஜயலட்சுமியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:சீமானுக்கு எதிரான புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் துணை ஆணையர் விசாரணை!
இதனைத் தொடர்ந்து, விசாரணையின் ஒரு பகுதியாக காவல் துணை ஆணையர் உமையாள், நடிகை விஜயலட்சுமியிடம் பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியை சித்திரவதை செய்தது, கரு கலைத்தது, மிரட்டியது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டது.