தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பள்ளிகளில் 100% கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!' - பள்ளி கட்டணம் வசூலித்து

திருவள்ளூர்: தனியார் பள்ளிகள் 100 விழுக்காடு கல்விக் கட்டணம் செலுத்தக்கூறினால் அப்பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

'Action will be taken if schools charge 100 percent fees' - Tiruvallur Collector warns!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்

By

Published : Sep 4, 2020, 9:43 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், பிறவாரியத்தில் இணைப்பு பெற்ற பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

இங்கு, சென்னை உயர் நீதிமன்ற ஆணைகளை மீறி 2020 - 2021ஆம் கல்வியாண்டில் 100 விழுக்காடு கல்விக் கட்டணம் செலுத்தக்கோரி கட்டாயப்படுத்தினால் matriccomplaintceotlr@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை உயர் நீதிமன்ற ஆணைகளை மீறி, மாணவர்கள் 100 விழுக்காடு கல்விக் கட்டணம் செலுத்தக் கோரி எவ்விதமான நிர்பந்தம் செய்யக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு நீதிமன்ற ஆணைகளை மீறி செயல்படும் பள்ளிகளின் மீது விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details