தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’குடிமராமத்துப் பணிகளில் அரசியல் தலையீடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ - திருவள்ளூர் செய்திகள்

திருவள்ளூர்: குடிமராமத்துப் பணிகளில் அரசியல் தலையீடு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைப் பொறியாளர் கூறியுள்ளார்.

restoration of water bodies
restoration of water bodies

By

Published : Jun 9, 2020, 7:54 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில், சேலை, ஏகாட்டூர், கைவண்டுர், பட்டறை பெரும்புதூர், காரணை உள்ளிட்ட ஊராட்சிகளில் இந்த ஆண்டு பொதுப்பணித் துறை சார்பில், 80 ஏரிகள், 32 கோடி ரூபாய் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் துார்வாரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று தலைமைப் பொறியாளர், திருவள்ளூர் மாவட்டச் செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆகியோர் பணிகள் குறித்து ஆய்வுசெய்தனர்.

பின்னர் தலைமைப் பொறியாளர் அசோகன் கூறுகையில், “திருவள்ளூர் மாவட்டத்தில் 32 கோடி ரூபாய் மதிப்பில் 80 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதகுகள் சீரமைத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நீர்வரத்து கால்வாய்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நீர்வழி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. பருவ மழைக்கு முன்பு இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்படும்.

இப்பணிகள் ஏரி பாசன சங்கத் தலைவர்கள் மூலமாக நடைபெற்றுவருகின்றன. இதில் அரசியல் தலையீடு மற்றும் முறைகேடுகள் இருந்தால் எங்களது கவனத்திற்குக் கொண்டுவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கும்மிடிப்பூண்டி, தேர்வாய் கண்டிகையில் மிகப் பெரிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டிமுடிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க:பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர்கள்

ABOUT THE AUTHOR

...view details