திருவள்ளூரை அடுத்த குச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மகன் பாஸ்கரன் (48). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
எம்எல்ஏ மனைவியின் கார் மோதி ஒருவர் பலி...! - Accident
திருவள்ளூர்: திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மனைவியின் கார் மோதி விபத்துக்குள்ளானதில், குச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவர் பலி
இந்நிலையில், பாஸ்கரன் இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதி திமுக உறுப்பினரின் மனைவியும், தனியார் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியின் இயக்குனருமான இந்திராவின் கார், இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், பாஸ்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளவேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.