திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா இன்று வெகு விமரிசையாக தொடங்கியது. மூலவரான முருகப்பெருமான் சிறப்பு தங்க கவச அலங்காரம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோல் திருக்கோயில் வளாகத்தில் உற்சவர் சண்முகர் சிவப்பு புஷ்பம் மற்றும் தங்க ஆபரணத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஆடி கிருத்திகை: திருத்தணியில் பக்தர்கள் சாமி தரிசனம். - சுப்பிரமணிய சுவாமி
திருவள்ளூர்: திருத்தணியில் உள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆடி பரணி விழாவில் பக்தர்கள் காவடி எடுத்து தரிசனம் செய்தனர்.
ஆடி பரணி விழா காவடி எடுத்து பக்தர்கள் தரிசனம்.
இந்நிகழ்ச்சியை காண வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்துவந்து சாமி தரிசனம் செய்தனர்.