தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருத்தணி அருகே டிவி விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு!

திருத்தணி டிவி விழுந்து உயிரிழந்த குழந்தையின் பிரேதத்தை எடுத்துச்சென்ற மருத்துவமனை ஊழியர்களை, குழந்தையின் சடலத்தை உடற்கூராய்வு செய்யக்கூடாது என்றுகூறி உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்தணி அருகே டி.வி விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு!
திருத்தணி அருகே டி.வி விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு!

By

Published : Oct 14, 2022, 10:41 PM IST

திருவள்ளூர்: திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள முஸ்லிம் நகர் பகுதியில் வசிப்பவர், சதாம் உசேன். இவர் கூலித்தொழிலாளி. இவரது மனைவி சமிம், இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடைசிக்குழந்தையான ஆண் குழந்தை முகமது சோபியா(2),வீட்டில் டி.வி பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது திடீரென்று மீது அவர் டிவி விழுந்தது. இதையடுத்து காயம் அடைந்த குழந்தையை உறவினர்கள் திருத்தணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.

பணியிலிருந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, குழந்தையை பரிசோதனை செய்து பார்த்தனர். அப்பொழுது குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். உடனடியாக குழந்தையின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தையை கொடுத்துவிடுங்கள் என்று மருத்துவர்கள் இடமும் மருத்துவமனை ஊழியர்களிடமும் விவாதம் செய்தனர்.

மருத்துவமனை ஊழியர்கள் பிரேதப்பரிசோதனைக்காக குழந்தையை எடுத்துச்செல்வோம் என்று கூறியதில் குழந்தையின் உறவினர்கள், அதனை ஏற்காமல் மருத்துவமனையில் கூச்சல், குழப்பம், பிரச்சனை செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் உடனடியாக திருத்தணி போலீசார் வந்து பிரச்னை செய்த குழந்தையின் உறவினர்களை சமாதானம் செய்து பிரேதப்பரிசோதனை திருத்தணி மருத்துவமனையில் செய்த பிறகு தான், குழந்தையின் பிரேதத்தைத் தர முடியும் என்று கூறி சமரசம் செய்தனர்.

குழந்தை இறந்தது குறித்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கிராமிய காவல் நிலையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:7.5% இடஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நீட்டிப்பது குறித்து மறு ஆய்வு செய்யலாம்!

ABOUT THE AUTHOR

...view details