திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த காணியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட குமார சிட்லபாக்கம் என்ற கிராமத்தில், அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக நிலத்தை தோண்டிய போது சுமார் இரண்டரை அடி உயரம் உள்ள புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.தகவல் அறிந்த சென்ற வருவாய் துறையினர் விசாரணை நடத்தி பின் பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்துக்கு தகவல் அளித்தனர்.
பள்ளிக்கூடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய இடத்தில் இரண்டரை அடி உயரமுள்ள புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புத்தர் சிலை பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை கி.பி.14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த மிக பழமையானது என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சர் அன்பில் மகேஷின் ஆம்புலன்ஸ் சர்ச்சை: தஞ்சை மாவட்ட ஆட்சியர் விளக்கம்!