திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புழல் கதிர்வேடு கலெக்டர் நகர் செல்லும் சாலையில் மது போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு போதைக்கு அடிமையான திருவள்ளூர் லட்சுமிபுரம் ஜே.என். சாலையைச் சேர்ந்த குணசந்திரன்(51) கடந்த அக்டோபர் மாதம் அனுமதிக்கப்பட்டார்.
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்தவர் உயிரிழப்பு! - thiruvallur district news
புழல் பகுதியிலுள்ள மது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்தவர் உயிரிழப்பு! rehabilitation center died](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9890896-thumbnail-3x2-died.jpg)
இந்நிலையில், நேற்று (டிசம்பர் 14) மறுவாழ்வு மையத்தில் மயங்கிவிழுந்த அவர் கொளத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (டிசம்பர் 15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த புழல் காவல்துறையினர் குணசந்திரனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், குணசந்திரனின் உறவினர்கள் இன்று போதை மறுவாழ்வு மையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை!