தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 24, 2021, 2:52 PM IST

Updated : Jun 24, 2021, 3:15 PM IST

ETV Bharat / state

சகோதரியின் கணவரை கொன்ற மைத்துனர் கைது!

திருவள்ளூரில் சகோதரியை துன்புறுத்தி வந்த கணவரை, நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த மைத்துனரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சகோதரர் உள்பட மூவர் கைது
சகோதரர் உள்பட மூவர் கைது

திருவள்ளூர்: திருத்தணி அக்கைய்யநாயுடு 2ஆவது டேங்க் தெருவைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவருக்கு சரண்யா என்ற மனைவியும், ஐந்து வயதில் லத்தீப் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த, 2016ஆம் ஆண்டு திருத்தணி அதிமுக கவுன்சிலர் ஆறுமுகம் என்பவரை வெட்டிக் கொலை செய்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளில் ஈடுபட்டிருந்த ஜாகீீர் உசேன் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

ஜாகீர் உசேன் கொலை

இவர் நாள்தோறும் மதுகுடித்தும், கஞ்சா அடித்தும் வீட்டிற்கு வந்து மனைவி சரண்யாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (ஜூன் 23) ஸ்டாலின் நகரிலுள்ள‌ உச்சி பிள்ளையார் கோயில் வளாகத்தில் இருந்த ஜாகீர் உசேனை, மூவர் கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

3 பேர் கைது:

இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற திருத்தணி காவல் துறையினர், ஜாகீர் உசேனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஜாகீர் உசேனை கொலை செய்த குமரேசன் அவரது நண்பர்கள், ஜெய்சந்துரு, சந்தோஷ்பாபு ஆகியோரை கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

குமரேசனிடம நடத்திய விசாரணையில், தங்கையை கொடுமைபடுத்தியதால் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மூவரும் திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: 6 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை: முக்கியக் குற்றவாளி கைது

Last Updated : Jun 24, 2021, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details