தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்மிடிப்பூண்டி அருகே சாலையை கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மினி லாரி! - Mini truck submerged in flood

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜா கண்டிகையில் தரைப்பாலம் வழியாகச் சாலையைக் கடக்க முயன்ற மினி லாரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் கணவரின் சீரிய முயற்சியால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

van
van

By

Published : Dec 4, 2020, 11:20 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜா கண்டிகை ஊராட்சியில் உள்ள தனியார் அட்டை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைக்கு, கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையிலிருந்து அட்டை உற்பத்திப் பொருளை ஏற்றிவந்த மினிலாரி தரைப்பாலத்தின் மீது செல்லும் வெள்ளநீரில் அடித்துச் சென்றது. ஓட்டுநர் தடையை மீறி சென்றதால் மினி லாரியில் வந்த ஓட்டுநர் உள்பட நான்கு பேர் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர்.

பின்னர் தகவலறிந்து வந்த சித்தராஜா கண்டிகை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முரளி, கிராம இளைஞர்களுடன் இணைந்து கயிற்றின் மூலம் சாதுர்யமாகக் காப்பாற்றினார். வெள்ளநீரில் தொடர் பலிகள் ஏற்படும்பட்சத்தில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவருடைய சீரிய முயற்சியால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details