தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூந்தியும், வாந்தியும்... கானா பாடகரின் ஆபாச பாடல்: பொதுமக்கள் கண்டனம் - சர்ச்சைக்குறியப் பாடலைப் பாடிய கானாப் பாடகர் மீது நடவடிக்கை

சிறுமிகளை ஆபாசமாகச் சித்திரித்து சர்ச்சைக்குரிய பாடலை பாடிய கானா பாடகர் சரவெடி சரணுக்கு எதிராகப் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை கர்ப்பமாக்குவேன் என சர்ச்சைக்குறிய பாட்டை பாடிய கானா பாடகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : காவல் துறை
சிறுமியை கர்ப்பமாக்குவேன் என சர்ச்சைக்குறிய பாட்டை பாடிய கானா பாடகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : காவல் துறை

By

Published : Dec 23, 2021, 7:24 PM IST

Updated : Dec 25, 2021, 7:08 PM IST

சென்னை: சரவெடி சரண் (26) என்ற பெயரில் கானா பாடல் பாடிவரும் நபர், 'சிறுமியைக் கர்ப்பமாக்குவேன்' எனப் பாடல் பாடி பதிவிட்டுள்ளார். அது திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் கவனத்திற்கு வர, அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் 16ஆவது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கானா பாடல்கள் தற்போது மிகப் பெரிய கவனத்தைப் பெற்றுவருகின்றன. அதில் இயங்கும் பலர் அரசியல், சமூக கருத்து, நய்யாண்டி என ஆரோக்கியமான வகையில் பாடல்களை உருவாக்குகிறார்கள். சிலர் ரவுடித்தனத்தை, போக்கிரித்தனத்தை ஊக்குவிக்கும் வகையில் வரிகள் அமைத்துப் பாடிவருகிறார்கள்.

அதனை ரசிப்பதற்கும் ஒரு கூட்டம் உருவாகியிருப்பது வேதனையின் உச்சம். இந்நிலையில் 'டோனி ராக் எ போட்டி கானா' என்ற பெயரில் ஒரு காணொலி 2020 மார்ச் மாதம் வெளியாகியிருக்கிறது. அதில் சரவெடி சரண், டோனி ராக் ஆகிய இரு கானா பாடகர்கள் பாடல் பாடுகின்றனர்.

குருவிக் கூடு மண்டையுடன் சரவெடி சரண் பாடும் பாடலில் உள்ள வரிகள், சிறுமிகளை ஆபாசமாகச் சித்திரிக்கிறது.

பாடியவர்கள் மீது விரைவில் நடவடிக்கை

தற்போது இந்தக் காணொலி பரவத் தொடங்கியுள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், அக்காணொலி திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண் குமார் கவனத்திற்குச் சென்றுள்ளது. அந்தப் பாடலைப் பாடியவர்களின் விவரங்களைச் சேகரித்துவருவதாக வருண் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், போக்சோ சட்டத்தின் 16ஆவது பிரிவை கவனத்தில் கொள்ளும்படி காவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். அச்சட்டப் பிரிவின்படி சிறார்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நடக்கத் தூண்டுபவர்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து

Last Updated : Dec 25, 2021, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details