தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

15 வயது சிறுமி கர்ப்பம்: காரணமான முதியவர் அதிரடி கைது! - The old man is responsible for the conception

திருத்தணியில் 15 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி சீரழித்த 50 வயது மதிக்கத்தக்க முதியவரை, காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

15 வயது சிறுமி கர்ப்பம்-அதிர்ச்சியடைந்த தாய்!!!
15 வயது சிறுமி கர்ப்பம்-அதிர்ச்சியடைந்த தாய்!!!

By

Published : Nov 4, 2022, 5:11 PM IST

திருவள்ளூர்:திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதியைச் சார்ந்த 15 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி வருவதை அறிந்த தாயார் இதற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பார்த்தார்.

அதன்பின்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதனையடுத்து மருத்துவர்கள் சிறுமியின் தாயாரிடம் 3 மாதம் கருவுற்றுள்ளதாக கூறினர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிறுமியின் கருவுறுதலுக்குக் காரணமானவர் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சிறுமியின் கருவுறுதலுக்குக் காரணம், கூலித் தொழிலாளி ராமைய(50) என்பது தெரியவந்தது.

இந்த முதியவர் தான் அந்தச் சிறுமி கருவுறுதலுக்குக் காரணமானவர், என்று போலீசார் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து ராமையாவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து, திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்செய்தனர்.

அதையடுத்து நீதிபதி உத்தரவின்பேரில் ராமையாவை சிறையில் அடைத்தனர். 15 வயது சிறுமியின் கருவுறுதலுக்குக் காரணமான 50 வயது முதியவரின் செயலால்,அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:பண்ணாரி சோதனை சாவடி வழியாக கடத்த முயன்ற 2 டன் குட்கா பறிமுதல்!!

ABOUT THE AUTHOR

...view details