தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்டெய்னர் லாரி கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்து... - Oothukottai police investigation

திருவள்ளூர் அருகே கண்டெய்னர் லாரி கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 28, 2022, 11:46 AM IST

Updated : Sep 28, 2022, 1:08 PM IST

திருவள்ளூர்: சென்னை துறைமுகத்திலிருந்து, ஆந்திர மாநிலம் பெல்லாரி நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று கணினி மென்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. ஊத்துக்கோட்டை அடுத்த கிருஷ்ணா கால்வாய் தரைப் பாலத்தில் சென்ற போது, எதிரே மினி வேன் வந்துள்ளது.

அதற்கு செல்ல வழி விட்டபோது, கண்டெய்னர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகளை உடைத்துக் கொண்டு தலைக் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கண்டெய்னர் லாரி கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்து...

கால்வாயில் தண்ணீர் செல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், ஓட்டுநர் ஒரு சில காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தொடர்ந்து, கால்வாயில் விழுந்த கண்டெய்னர் லாரியை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பெட்ரோல்,மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு சம்பவம்...23 பேர் கைது

Last Updated : Sep 28, 2022, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details