சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டு, சென்னையின் மேற்கு மாம்பலம் ஆற்காடு சாலையில் வசித்து வருகிறார், மஞ்சு (35). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தந்தையின் பாதுகாப்பில் ஆடை வடிவமைப்பு தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. சின்னத்திரை நடிகைகள், தொகுப்பாளர்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்து வருகிறார்.
நடிகர் ஜெமினி கணேசனின் பேரனும், ''சென்னை 28 - பாகம் 2'' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் அபிநவ் என்பவரின் மனைவி அபர்ணா. இவர், மஞ்சுவிடம் வாடிக்கையாளராக நன்றாகப் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு, மஞ்சுவின் மகள் லாவண்யாஸ்ரீ 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார்.
லாவண்யாஸ்ரீ விரும்பக்கூடிய கல்லூரி கிடைக்காத விஷயத்தை கேள்விப்பட்ட அபர்ணா அபிநய், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தனக்கு தெரிந்த நண்பர் இருப்பதாகவும், 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் மகள் லாவண்யாஸ்ரீக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி விடலாம் என மஞ்சுவிடம் கூறியிருக்கிறார்.
முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து மருத்துவச் சீட்டை புக் செய்து ரசீது பெற்றுக் கொள்ளலாம் என அபர்ணா கூறியுள்ளார். மீதி பணத்தை கல்லூரியில் சேர்ந்த பின்பு செலுத்திக் கொள்ளலாம் எனவும் கூறி இருக்கிறார். இதனை நம்பிய மஞ்சு கடந்த ஜனவரி மாதம், 5 லட்சம் ரூபாயை அவர் கூறியபடி அபர்ணாவின் நண்பரான அஜய்யின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தியிருக்கிறார்.