தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் 95.62 விழுக்காடு தேர்ச்சி - ஆட்சியர் பெருமிதம் - Eleventh Class Exam Results

திருவள்ளூர்: பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.62 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளதாக திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

collector maheshwari
collector maheshwari

By

Published : Jul 31, 2020, 2:17 PM IST

பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகளை அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி இன்று (ஜூலை 31) வெளியிட்டார். அதன்படி, பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டார்.

திருவள்ளூரில் 19 ஆயிரத்து 486 மாணவர்களும், 20 ஆயிரத்து 955 பெண்கள் உள்பட மொத்தம் 41 ஆயிரத்து 441 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில், 18ஆயிரத்து 667 மாணவர்களும், 26 ஆயிரத்து 387 மாணவிகள் உள்பட 39 ஆயிரத்து 624 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 106 அரசுப் பள்ளிகளில் 14 ஆயிரத்து 989 மாணவர்களும், 13 ஆயிரத்து 458 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு தேர்ச்சி 89.79 விழுக்காடாக இருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அரசுப் பள்ளிகளில் 3.18 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதன் மூலம் 95.62 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் 139 பேர் தேர்வு எழுதினார்கள். இதில், 129 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய சிறையில் தேர்வு எழுதிய 85 நபர்களில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு - 96.04 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி

ABOUT THE AUTHOR

...view details