திருவள்ளூர்மாவட்டம் திருத்தணி வட்டம் கார்த்திகேயபுரம் கிராமத்தில் வசிக்கும் நாராயணசுவாமி என்ற 92வயது முதியவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது வழக்கறிஞர்களுடன் வந்து மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் துறவி நாராயணசாமி குறிப்பிட்டுள்ளதாவது, "நான் ஒரு துறவி. திருத்தணி கார்த்திகேயபுரம் கிராமத்தில் ஆசிரமம் நடத்திவருகிறேன். எனக்கு நாகலாபுரம் சாலை ஊத்துக்கோட்டையில் ஸ்ரீசௌபாக்கிய தங்க மாளிகை கடை நடத்திவரும் அன்பழகன் பல ஆண்டு காலமாக நெருங்கிய நண்பர்.
இவருடைய தங்க வியாபாரத்திற்கும் என்னிடம் கடன் கேட்பார். நான் என்னுடைய விவசாய நிலத்தை விற்பனை செய்து ஆசிரமம் கட்டுவதற்காக வைத்திருந்த பணம் ரூபாய் 22,60,000 பெற்றுக்கொண்டுள்ளார். அதற்கு உரிய பத்திரம் கொடுத்துள்ளார்.
92 வயது துறவி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு மேலும் அவருடைய தங்க வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய என் நண்பர் ஸ்ரீராமுலு ரெட்டியாரிடமிருந்து மூன்று தவணையாக ரூபாய் 51,29000/- பெற்றுக் கொடுத்தேன். மேலும் சோழவரம் ஆட்டத்தங்கள் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவரிடமிருந்து 8,00,000 ரூபாய் பணத்தை வாங்கிக்கொடுத்தேன். அன்பழகன் பணம் வாங்கிய நாளிலிருந்து எங்கள் யாருக்கும் வட்டி ஏதும் கொடுக்கவில்லை.
நான் சிலகாலங்கள் அவருக்காக வட்டிக் கட்டியுள்ளேன். அசல் பணத்தை கொடுக்காமல் 3 ஆண்டுகாலமாக ஏமாற்றி வந்தார்.
ஆசிரமம் கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.82 லட்சம் பணம் : 92 வயது துறவியிடம் மோசடி இப்போது மொத்தம் ரூபாய் 81,89,000, மோசடி செய்துவிட்டு ஊத்துக்கோட்டையில் இருந்த தங்கமாளிகை கடையை மூடிவிட்டு தலைமறைவாகி, அரக்கோணம் சாலை கிராமத்தில் அவருடைய மகள் மகேந்திரராஜா உடன் ஓம் ஸ்ரீ டிரேடர்ஸ் என்ற பெயரில் மற்றொரு வியாபாரம் தொடங்கியுள்ளார். துறவியான என் மீது இருந்த நம்பிக்கையில் பணத்தைக் கொடுத்தார்கள். தற்போது நான் இவர்களுக்குப் பணத்தைக் கொடுக்கவேண்டிய சூழ்நிலையில் உள்ளேன்.
ஆதலால் ஐயா அவர்கள் எங்களை ஏமாற்றிய அன்பழகனிடமிருந்து மேற்படி ரூபாய் 81,89,000 / ரூபாயை பெற்று கொடுத்து இந்த வயதான காலத்தில் மனவேதனைக்கு ஆளாகியுள்ள என்னை காப்பாற்றுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என அந்த மனுவில் நாராயணசாமி குறிப்பிட்டிருந்தார்.
மேலும் புகார் மனு மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் குற்றச்சாட்டுக்குள்ளான அன்பழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என புகார் மனு குறித்து காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'விரைவில் திராவிட குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டப்படும்' - அண்ணாமலை விமர்சனம்