தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 25, 2021, 3:25 PM IST

ETV Bharat / state

தேர்தல் விதிமீறல் தொடர்பாக 80 வழக்குகள்: திருவள்ளூர் காவல் துறை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக மாவட்டம் முழுவதும் காவல் நிலையத்தில் 80 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்தன்
திருவள்ளூர் காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்தன்

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக மாவட்டம் முழுவதும் காவல் நிலையத்தில் 80 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் காவல் துறை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், தேர்தல் பாதுகாப்புக்காக மாவட்டம் முழுவதும் காவல் துறையினர், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், எட்டு துணை ராணுவ கம்பெனி படையினர் உள்பட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவுள்ளதாகவும், தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அனைத்துக் காவலர்களுக்கும் அஞ்சலில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்துவருவதாகவும், மாவட்டம் முழுவதும் 103 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதில், தற்போது மாவட்டம் முழுவதும் 88 துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற துப்பாக்கிகள், வங்கிகள் ஏடிஎம் மையங்களில் இருப்பதால், அதற்கு ஆலோசனை கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பல்வேறு வழக்கில் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் 22 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் 354 பேர் மீது நன்னடத்தைச் சான்றிதழ் பெறப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details