திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அனைத்துப் பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றப. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு, பூவிருந்தவல்லி ஆகிய நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
'திருவள்ளூரில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்' - ஆட்சியர் - திருவள்ளூரில் 8 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர்
திருவள்ளூர்: கரோனா தொற்று பாதிப்பிலிருந்து 8 ஆயிரத்து 872 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
8 Thousand People Recovered From Corona In Thiruvallur
இதனால், கரோனா தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தேவையான சிகிச்சையை வழங்க ஏதுவாக உள்ளது. இதன் காரணமாக, கடந்த ஜூலை மாதம் முதல் வாரத்தில் 2.6 விழுக்காடாக இருந்த இறப்பு விகிதம் தற்போது 1.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இதுவரை 13 ஆயிரத்து 184 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 8 ஆயிரத்து 872 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்றார்.