தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

700 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது - 700 kg of cannabis seized

திருவள்ளூர்: கவரப்பேட்டை அடுத்த பனப்பாக்கத்தில் விவசாய மின் மோட்டார் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

700 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
700 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

By

Published : Apr 8, 2021, 1:20 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே பனப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே விவசாய நிலத்தில் விவசாய மின்மோட்டார் அறையில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினரின் தீவிர விசாரணையில் மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான 700 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து ராஜஸ்தானை சேர்ந்த பிரபாஷ் சிங் (23) என்பவரை கைது செய்து கடத்தலில் வேறு யார் யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து அடுத்தக்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:'என்ஜாய் எஞ்ஜாமி' ரிப்பீட் மோடில் ரன்வீர் சிங்

ABOUT THE AUTHOR

...view details