திருவள்ளூர்: ராணிப்பேட்டை நெமிலி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரது மனைவி தேவி. இவர் மணவாளநகர் கபிலர் நகரில் உள்ள தனது மகள் அபிராமி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 28) இரவு சுமார் 8 மணி அளவில் மணவாளநகர் பகுதியில் உள்ள பாத்திமா துணிக்கடைக்கு துணி எடுப்பதற்காக தனது மகளுடன் சென்றுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், தேவி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மணவாளநகர் காவல் துறையினருக்கு தேவியும் அவரது மகளும் தகவல் கொடுத்தனர்.
இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சட்ட விரோத கருக்கலைப்பு - போலி பெண் மருத்துவர் கைது