தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயிலில் திருடுபோன 3 சாமி சிலைகள் பறிமுதல் : 7 இளைஞர்கள் கைது

திருவள்ளூர்: கடந்த அக்டோபரில் பெரியபாளையம் அருகே கோயிலில் சிலைகள் திருடிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒன்றரை அடி உயரமுள்ள 3 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோயிலில் திருடுபோன 3 சாமி சிலைகள் பறிமுதல் : 7 இளைஞர்கள் கைது
கோயிலில் திருடுபோன 3 சாமி சிலைகள் பறிமுதல் : 7 இளைஞர்கள் கைது

By

Published : Feb 1, 2021, 5:04 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அன்னதான காக்கவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் கடந்த அக்டோபர் மாதத்தில் சாமி சிலைகள் திருடுபோயின. இதேபோல அருகில் உள்ள அம்மன் கோயில்களிலிருந்தும் நகைகள் திருடப்பட்டன.

இது குறித்து பெரியபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் பெரியபாளையம் அடுத்த வடமதுரை கூட்டு சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தது.

கோயிலில் திருடுபோன 3 சாமி சிலைகள் பறிமுதல்

சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களை மடக்கி தீவிர விசாரணை மேற்கொண்டதில் கோயில்களில் கொள்ளையடிக்கும் கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புமிக்க ஒன்றரை அடி உயரமுள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனான சீனிவாச பெருமாள் உள்ளிட்ட 3 சாமி சிலைகள், 3 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோயில்களில் கொள்ளையடித்த கவிசெல்வமணி, அம்பேத்கர், சண்முகராஜ், கார்த்திக், ராஜி, ஏழுமலை, விஜயன் ஆகிய ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க:கோயில் சிலைகள் மாயமாகும் விவகாரம்: இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details