திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் அதீத கனமழையின் காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குண்ணவளம் ஊராட்சிக்குள்பட்ட குப்பத்துபாளையத்தில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் வேளாண் நிலத்தில் வீடு கட்டி வசித்துவந்தனர்.
இவர்கள் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நேற்று அதிகாலை முதலே உணவின்றித் தவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த கோட்டாட்சியர் ரமேஷ், வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையிலானோர் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.