தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்காளர்களுக்குக் கொடுக்க வைத்திருந்த 500 புடவைகள் பறிமுதல்! - 500 sarees seized to providing voters in sembarapakkam

திருவள்ளூர்: செம்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 500 புடவைகளை உள்ளாட்சித் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

500 sarees seized to providing voters in thiruvallur
500 sarees seized to providing voters in thiruvallur

By

Published : Dec 26, 2019, 11:40 AM IST

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரை நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், பூந்தமல்லி அருகேயுள்ள செம்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்காளர்களுக்குப் புடவை விநியோகம் செய்யப்படுவதாக உள்ளாட்சித் தேர்தல் பறக்கும் படை மண்டல துணை வட்டாட்சியர் சங்கமித்திரைக்குத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு காவல் துறையினர், பறக்கும் படை அலுவலர்கள் விரைந்து சென்றபோது ஆட்டோவில் புடவைகளை விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.

இதையடுத்து, புடவையுடன் இருந்த ஆட்டோவை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்து, புடவை விநியோகம் செய்த நபர் யார்? எந்தக் கட்சியைச் சார்ந்தவர்? வாகனம் யாருடையது? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ, புடவைகள்

மேலும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்த புடவைகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:

வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ள 400 வாக்காளர்கள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details