தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் 2021: திருவள்ளூரில் இதுவரை ரூ.50 லட்சம் பறிமுதல் - மாவட்ட ஆட்சியர் பொன்னையா

திருவள்ளூர்: மாவட்டத்தில் இதுவரை 50 லட்சம் ரூபாய் வரை பறக்கும் படையினரால் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது என்று திருவள்ளூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

50 லட்சம் ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல்
50 லட்சம் ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல்

By

Published : Mar 10, 2021, 5:48 PM IST

நடைபெறவுள்ள 16ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் ஆட்படாமல் சுதந்திரமாக வந்து வாக்களிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் எனவும் மாவட்டத் தேர்தல் அலுவலகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அதில் ஒரு அங்கமாக திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் இந்தியன் வங்கி சார்பில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு விழிப்புணர்வுத் துண்டுப்பிரதிகள், ஏடிஎம் இயந்திரத்தில் வாடிக்கையாளர்களுக்கு கையில் வரும் சீட்டில் விழிப்புணர்வு வாசகம், அடையாளங்கள் அச்சிடப்பட்டு இன்றுமுதல் விநியோகிக்கப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியை மாவட்டத் தேர்தல் அலுவலர் பொன்னையா இன்று தொடங்கிவைத்தார். இது குறித்து அவர் கூறுகையில், ’’தேர்தல் நேர்மையாக நடைபெற பறக்கும் படையினர், நிலைக் கண்காணிப்புக் குழுவினர் ஆகியோர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற வாகன சோதனையில் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் எவ்வித ஆவணமும் இல்லாமல் கொண்டுசெல்லப்பட்டது.

மேலும் ஒரு லட்சத்திற்கு அதிகமாக சந்தேகத்திற்கிடமான வங்கிப் பணப்பரிவர்த்தனை கண்காணிக்கப்படுகிறது, பரிசுப்பொருள்கள் வழங்குவதைக் கண்காணித்து அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்று தெரிவித்தார்.

இதனையும் படிங்க : முத்துப்பேட்டையில் 18 கிலோ தங்கம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details