தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலத்தில் நண்பகல் 12 மணி வரை மதுப்பான கடைகள் இயங்கி வருகிறது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதியான கனகம்மாசத்திரம் பகுதியில் சிலர் ஆந்திர மாநிலத்திற்கு சென்று மொத்தமாக மதுபானங்களை வாங்கி வந்து தமிழ்நாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு மதுபானங்களை கடத்தி வந்த 5 பேர் கைது! - ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு மதுபானங்கள் கடத்தல்
திருவள்ளூர்: ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு மதுபானங்களை கடத்தி வந்த 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் திருவள்ளூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது இருசக்கர வாகனங்களில் ரூ. 20ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை வாங்கி வந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் (42), அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா (32), குணசேகரன் (27), கடம்பத்தூரை சேர்ந்த சம்பத் (43), ஆற்காடு குப்பத்தைச் சேர்ந்த பாலாஜி (30) ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.